மார்ச் மாதத்தில் தளபதி 65 படத்திற்கான பூஜை..?

Filming for Vijay's 65th film is reportedly set to begin in March or April with Pooja.

விஜயின் 65 வது திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் தற்போது வரை மக்களுக்கு மத்தியில் சிறந்த விமர்சனத்தையும் நல்ல வசூலையும் செய்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. அதற்கு பிறகு படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகிவில்லை. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மார்ச் மாதம் அல்லது ஏப்ரல் மாதம் தொடங்க இயக்குனர் நெல்சன் திலீப் குமார் திட்டமிட்டுள்ளாராம். இவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்திற்கான வேலைகளில் பிசியாக இருப்பதால் தளபதி 65 படத்திற்கான படப்பிடிப்பு குறித்த தகவலை விரைவில் வெயீடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.