"பீஸ்ட் "முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு மும்பை செல்லும் பூஜா..!

நடிகை பூஜா ஹெக்டே  "பீஸ்ட் " படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு மும்பையில் வேறொரு திரைப்படத்தின் படப்பிடிப்புகாக சென்றுள்ளார்.

நடிகை பூஜா ஹெக்டே  “பீஸ்ட் ” படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு மும்பையில் வேறொரு திரைப்படத்தின் படப்பிடிப்புகாக சென்றுள்ளார்.

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் “பீஸ்ட்”. இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் பூஜா ஹெக்டேக்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இதனால் பூஜா ஹெக்டே மும்பையில் வேறொரு திரைப்படத்தின் படப்பிடிப்புகாக சென்றுள்ளார். விரைவில் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் இணைவார் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் யோகி பாபு, வி.டி.வி கணேஷ், அபர்ணா தாஸ், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படதிற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

"பீஸ்ட் "முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு மும்பை செல்லும் பூஜா..!