தளபதி 65 படத்திற்காக பூஜா ஹெக்டே வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா..?

It has also been reported that actress Pooja Hegde has asked for a salary of Rs 3 crore to play Vijay opposite Commander 65.

தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதற்காக 3 கோடி சம்பளம் கேட்டுள்ளதாகவும் தகவல்.

நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்த படத்திற்கான பூஜை வருகின்ற 15 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாகவும், படத்திற்கான படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ரஷ்யாவில் தொடங்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் நடிப்பது உறுதியாகிவிட்டதாகும் இந்த வாரா இறுதிக்குள் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் அவர் நடிப்பதற்காக 3 கோடி சம்பளம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.