பழம்பெரும் பாலிவுட் நடிகை உத்தரா பாக்கர் காலமானார்.!

பிரபல பாலிவுட் நடிகையும் நாடகக் கலைஞருமான உத்தரா பாக்கர், தனது 79வது வயதில் மகாராஷ்டிராவின் புனே நகரின் அவரது இல்லத்தில் காலமானார்.

பிரபல பாலிவுட் நடிகையும் நாடகக் கலைஞருமான உத்தரா பாக்கர், தனது 79வது வயதில் மகாராஷ்டிராவின் புனே நகரின் அவரது இல்லத்தில் காலமானார்.

கடந்த ஒரு வருடமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த உத்தரா பாக்கர், செவ்வாய்க்கிழமை நாளிரவு மருத்துவமனையில் காலமானார். இந்நிலையில், அவரது இறுதிச் சடங்குகள் புதன்கிழமை காலை (அதாவது) நேற்று நடைபெற்றதாக அவரது குடும்பத்தினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

unknown node

நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் தனது நடிப்பைப் வெளிப்படுத்திய உத்தரா பாகர், முகிஹாமந்திரியில் பத்மாவதி, மேனா குர்ஜாரியில் மேனா, ஷேக்ஸ்பியரின் ஓதெல்லோவில் டெஸ்டெமோனா, நாடக ஆசிரியர் கிரிஷ் கர்னாட்டின் துக்ளக்கில் அம்மா போன்ற பல்வேறு நாடகங்களில் பல்வேறு வேடங்களில் நடித்திருக்கிறார்.

unknown node

பின்னர், கோவிந்த் நிஹ்லானியின் தாமஸ் திரைப்படத்தில் நடித்ததைத் தொடர்ந்து உத்தரா பாக்கர் பிரபலமடைந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.