திருப்பதியில் இன்று ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழா.!

Adipurush

ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ், கிருத்தி சனோன் மற்றும் சைஃப் அலி கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் ஜூன் 16 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் சைஃப் அலி கான் வில்லனாக நடிக்கிறார், இதில் தேவதத்தா நாகே மற்றும் சன்னி சிங் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது 3D மற்றும் IMAX வடிவங்களில் வெளியிடப்படும்.

இப்படம், இந்திய புராணக் கதையான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படம் பற்றி பேச்சுக்கள் அதிகமாக உள்ளது. இந்நிலையில், திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக அரங்கத்தில் இன்று மாலை 6 மணி முதல் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இதில் சிறப்பு விருந்தினராக சின்ன ஜீயர் சுவாமிகள் கலந்து கொள்கிறார். மைதானத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு, முழு நிகழ்ச்சியையும் இயக்குநர் பிரசாந்த் வர்மா கவனித்து வருகிறார். 100க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் மற்றும் 100 பாடகர்களுடன் மேடையில் பிரபாஸின் 50 அடி ஹாலோகிராபிக் படம் காட்சிப்படுத்தப்படுகிறதாம்.

இதனால், 1 லட்சத்துக்கும் அதிகமானோர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கின்றனர். மேலும் இந்த நிகழ்வு பங்கேற்பாளர்களுக்கு இதுவரை கண்டிராத அனுபவமாக இருக்கும் என உறுதியளிக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 08052025
Central government orders OTT platforms
Pakistan issues security alert
S-400
Union minister Jaishankar
Union minister Rajnath singh say about Operation Sindoor