ஒடிசா ரயில் விபத்து சம்பவ இடத்தில் சிபிஐ அதிகாரிகள்.! கிழக்கு ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்.!

ஒடிசா விபத்து குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த துவங்கி உள்ளனர்.

CBI investigate Odisha train accident

ஒடிசா விபத்து குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த துவங்கி உள்ளனர்.

ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் விபத்து சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த இந்த வழக்கு விசாரணையானது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

அதன்படி, தற்போது சிபிஐ அதிகாரிகள் சம்பவம் நடந்த பாலசோர் மாவட்டம் பஹானகா ரயில் நிலையத்தில் தங்கள் விசாரணையை தொடர்ந்து உள்ளனர். தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர் என கிழக்கு ரயில்வே கோட்ட மேலாளர் ரிங்கேஷ் ராய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.