பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு நிகழ்வில் பிரதமர் மோடி தோற்றத்தில் கலந்து கொண்ட நபரின் வீடியோ வைரலாகி வருகிறது.
பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
unknown nodePS2 TRAILER OUT NOW [Image Source : Twitter]
படம் வெளியாக இன்னும் 1 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
unknown nodeஇந்த இசை வெளியீட்டு விழாவில் பிரதமர் மோடி தோற்றத்தில் ஒரு நபர் கலந்துகொண்டார். அச்சு அசலாக அந்த நபர் மோடி போலவே இருந்ததால் அரங்கில் இருந்தவ பலரும் வியப்புடன் அவரை பார்த்தார்கள். இவர் யார் என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. அது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
unknown nodeமேலும், இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம் ஆகியோர் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.