இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டான்”. இந்த படத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மூன்றாவது பாடலான பிரைவேட் பார்ட்டி என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை அனிருத்தும், ஜொனிதா காந்தி இணைந்து பாடியுள்ளனர்.
unknown node