கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தை தயாரித்ததன் மூலம் பிரபலமானவர் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் . இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுக்கும் போது அஜித் குறித்து பேசிய விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த பேட்டியில் பேசிய மாணிக்கம் நாராயணன் ” 1995-96 அந்த காலகட்டத்தில் ஊருக்கு செல்வதற்காக என்னிடம் அஜித் பணம் கேட்டார்.
அந்த பணத்திற்கு நான் உங்களுக்கு படம் பண்ணி தரேன் அதில் நீங்கள் கழித்து கொள்ளுங்கள் என்றும் கூறினார். அவர் அவசரமாக பணம் கேட்டவுடன் நான் பணம் கொடுத்துவிட்டேன். ஆனால், அந்த பணத்தை இன்னும் அவர் எனக்கு திருப்பி தரவே இல்லை. அதே போல என்னுடைய தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து தருவதாக வாக்கு அளித்ததை இன்னும் நிறைவேற்றவில்லை. சினிமாவில் நடிக்க தெரியாது நல்லா வாழ்க்கையில் மட்டும் நடிக்கத் தெரியும்.
படத்துக்கு 10 கோடி விளம்பரத்துக்கு 5 கோடி? அதிர வைக்கும் நயன்தாரா சம்பளம்!
அவர் என்னிடம் கடன் வாங்கியிருந்தால், அந்த உண்மையை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும். இன்னும் என்னுடைய பணம் திரும்ப வரவே இல்லை. ஜெண்டில் மேன் என்று வார்த்தையால் சொல்ல கூடாது அவர் செய்யும் செயல்களில் தெரியவேண்டும். ” என்று பேசியிருந்தார். அஜித் பற்றி இவர் இப்படி பேசியது அவருடைய ரசிகர்களை கோபமடைய செய்தது. ஒரு பேட்டியில் மட்டுமின்றி 3 பேட்டிகளிலாவது அஜித் பற்றி அவர் பேசியிருந்தார்.
அதனை தொடர்ந்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அஜித் ஒரு மனுஷனே இல்லை என கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” அஜித் என்பவர் என்னை பொறுத்தவரை மனுஷனே இல்லை. நான் அவர் எனக்கு பணம் தரவில்லை என்று புலம்புவதாக சிலர் நினைக்கிறார்கள். அப்படி நினைப்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.
ஏனென்றால், நான் புலம்பவில்லை நான் என்னுடைய அனுபவத்தை தான் சொல்கிறேன். பணத்தை கொடுத்து நான் ஏமாந்தால் ஏமாளி என்று சொல்லலாம். நான் செய்த தவறு அது எனக்கு தண்டனையாக இந்த ஏமாற்றம் தான் கிடைத்தது. ஜெண்டில் மேன் என்றால் அதனை நிருபிக்கவேண்டும்” எனவும் அஜித் குறித்து மாணிக்கம் நாராயணன் பேசியுள்ளார். அஜித் குறித்து இவர் விமர்சித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
