திரைத்துறையினருக்கும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்க வேண்டும் என திரைத்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
நேற்று தமிழக அரசானது, மத்திய அரசின் ஊரடங்கு தளர்வுகளின் படி தமிழகத்திற்கும் பலவேறு தளர்வுகளை அறிவித்தது. அதன் படி, தொழிற்சாலைகள், ஐடி கம்பெனிகள், கட்டட தொழிலாளர்கள், சிறு குறு தொழில் நிறுவனங்கள் என பலவற்றுக்கு விதிமுறைகளோடு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
unknown nodeதற்போது அதே போல திரைத்துறையினருக்கும் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்க வேண்டும் என திரைத்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர். மற்ற தொழில் துறையினருக்கு அளிக்கப்பட்ட தளர்வுகள் போல திரைத்துறையினருக்கும் குறிப்பிட்ட தளர்வுகள் வழங்க வேண்டும் எனவும்,
அல்லது, குறைந்தபட்சமாக ஷூட்டிங் அல்லாத ரீ-ரெக்கார்டிங், டப்பிங் போன்ற பணிகளையாவது திரைத்துறையினர் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என திரைத்துறை தொழிலாளர் சங்க அமைப்பான ஃபெப்சி சார்பாக ஆர்.கே.செல்வமணி அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.