'இங்க நான்தான் கிங்'...நான் வச்சதுதான் ரூல்ஸ் – தெறிக்கும் தலைவரின் பஞ்ச் டயலாக்..!

ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' படக்குழு படத்தின் இரண்டாவது சிங்கிளான 'ஹும் ஹும்' பாடலின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். உருது மொழியில் ஹுகும் என்றால் ஒழுங்கு

Featured image

ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படக்குழு படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘ஹும் ஹும்’ பாடலின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். உருது மொழியில் ஹுகும் என்றால் ஒழுங்கு என்று பொருளாகும். ஜெயிலரில் ரஜினிகாந்த் வார்டனாக நடிப்பதால் அது சம்பந்தமான பாடலாக அமைந்திருக்கிறது.

unknown node

HukumPreview [Image Source : @rajini_mano]

பாடல் தொடக்கத்தில், “இங்க நான்தான் கிங” நான் வச்சதுதான் ரூல்ஸ், அந்த ரூல்ஸ அப்பப்ப மாத்திட்டு இருப்பேன்….அத கப்சிப் னு கேட்டு பாலோவ் பன்னனும் என்று மாஸ் காட்டியுள்ளர். அனிருத்தின் பிஜிஎமும் சும்மா பதற விடுகிறது.

unknown node

ஏற்கனவே, வெளியான படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘காவாலா’ பாடல் இணையத்தில் ஒரு கலக்கு கலக்கி வருகிறது. அண்ணாத்த படத்தை தொடர்ந்து ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக காத்திருக்கும், ‘ஜெயிலர்’ திரைப்படம் ரஜினிகாந்த்துக்கு ஒரு திருப்பு முனையாக அமையும்.

unknown node

HukumPreview [Image Source : @rajini_mano]

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் தமன்னா, மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சுனில், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.