கமலுக்கு வில்லனாகும் ராகவா லாரன்ஸ்..!

It has been reported that actor Raghava Lawrence will play the villain in Vikram's film starring Kamal

கமல் நடிக்கவுள்ள விக்ரம் படத்தில் வில்லனாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாக தகவல்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். மேலும் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் பணியாற்றவுள்ளார். இந்த படத்திற்கான டைட்டில் டீசர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி வெளியானது.

அதற்கு பிறகு இந்த படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தேர்தல் முடிந்த பிறகு தொடங்குமா அல்லது இந்த மாதம் தொடங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் தற்போது இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க பேச்சு வார்த்தை நடித்தி வருவதாக கூறப்படுகிறது இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.