இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடிப்பில் கடத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பல விருதுகளை குவித்து வருகிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்திருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையுலகின் உயரிய விருதுகளாக கருதப்படும் ‘ஆஸ்கா்’ மற்றும் ‘கோல்டன் குளோப்’ விருதுகளுக்கு பல்வேறு பிரிவுகளில் இந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக இந்த ஆண்டுக்கான சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருதை ‘நாட்டு நாட்டு’ பாடல் வென்றிருந்தது .
இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படக்குழுவுக்கு ஒரு பக்கம் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், இயக்குனர் ராஜமௌலி ஜுராசிக் பார்க் படத்தை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குனரான ஸ்டீவன் ஃபீல்பெர்க்கை சந்தித்துள்ளார். அவர்களுடன் இசையமைப்பாளர் கீரவாணியும் இருக்கிறார்.
ஸ்டீவன் ஃபீல்பெர்க்கை சந்தித்தபோது எடுத்துகொண்ட புகைப்படங்களை இயக்குனர் ராஜமௌலி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியீட்டு ” நான் இப்போதுதான் கடவுளை சந்தித்தேன்” என பதிவிட்டுள்ளார்.
unknown node