தமிழ் திரையுலகில் கஜேந்திரா, லவ்லி, லூட்டி பிதாமகன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ. துரை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வருகிறார். உதவி செய்யுமாறு வீடியோ வெளியிட்டு கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார்.
unknown nodeவி.ஏ. துரை [Image Source : Google ]
அந்த வீடியோவில் வி.ஏ. துரை பேசியதாவது ” நான் இப்போது சர்க்கரை நோயால் மிகவும்பாதிக்கப்பட்டு இருக்கிறேன். இதனால், என்னுடைய காலில் உள்ளே எலும்பு தெரியும் அளவிற்கு புண்கள் ஏற்பட்டுஉள்ளது. இந்த நோயால் கொஞ்சம் கொஞ்சமாக என் கால்கள் அரித்து விடும் நிலைமையில் இருக்கிறது.
unknown nodeV.A. Durai [Image Source : Google ]
எனக்கு மருந்து வாங்குவதற்கு கூட பணம் சுத்தமாக இல்லை. எனக்கு யாராவது உதவி செய்யுங்கள். நடிகர் ரஜினி சார் எனக்கு 40 வருச நண்பர், அவருக்கு இதை தெரியப்படுத்தனும் என மருத்துவ சிகிச்சைக்கு உதவ தயாரிப்பாளர் வி.ஏ. துரை கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.
unknown nodeSuriya [Image Source: Twitter ]சினிமாவில் ஏற்பட்ட நஷ்டத்தால் அனைத்து சொத்துக்களையும் வி.ஏ. துரை இழந்துள்ளார். மேலும், இவரது நிலை அறிந்த நடிகர் சூர்யா சிகிச்சைக்கு 2 லட்சம் வழங்கியுள்ளார். விரைவில் அவருக்கு சில பிரபலங்களும் உதவி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.