ரஜினி படத்தில் வில்லனாக களமிறங்கும் பிரபல நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் திரைப்படத்தை தொடர்ந்து, தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் போன்ற பிரபலங்கள் நடிக்கும் இப்படத்திற்கு டி இமான் இசை அமைக்கிறார். மேலும் ரஜினியுடன் முதன் முதலாக இந்த கூட்டணியில் இணைந்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதனை அடுத்து இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025