எம்.ஜி.ஆர். -சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித் என எப்போதும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இரு துருவங்கள் தேவைப்படுகிறது. தங்கள் ஆதர்சன நாயகனை பெருமை படுத்துவதாகவும், தங்கள் பலத்தை காட்டவும், மற்ற எதிர் நடிகர்களை தரைகுறைவாக விமர்சித்து வருவர்.
இதனை அண்மைகாலமாக இணையதளத்தில் அரங்கேற்றுவது பெரும்பாலும் தல தளபதி ரசிகர்கள் தான். இதனை தற்போது கையில் எடுத்து இருபிப்பது கமல் – ரஜினி ரசிகர்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையில் நடிக்க ஆரம்பித்து 44 வருடம் ஆகிறது. அதனை கொண்டாடும் வகையில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் டிவிட்டரில்#44YearsOfRajinismManiaBeginsஅதேபோல, கமல் ரசிகர்களும் உலகநாயகன் சினிமாவிற்குள் நுழைந்து 60 வருடம் ஆனதை#60PathBreakingYrsOfKamalஎன்ற ஹேஸ்டேக்குகள் மூலம் கொண்டாடி வருகின்றனர்.