அனைவரையும் சரிசமமாக பார்க்கும் அன்பும் பிரகாசமும் கொண்டவர் ரஜினி : ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில், சந்தோஷ் சிவன் தனது ட்வீட்டர் பக்கத்தில், தர்பார் படத்தில் ரஜினியுடன் பணியாற்றியது குறித்து, தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ” அனைவரையும் சரிசமமாக பாவிக்கும் ஆச்சரியகரமான அன்பும், பிரகாசமும் ரஜினி சாரிடம் உள்ளது. அனைவரையும் எந்த விதமான பாகுபாடும் இல்லாமல் சரிசமமாக நடத்துவது உண்மையில் பிரமிக்க வைக்கிறது என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025