#Breaking: ரஜனி மகள் வீட்டில் திருட்டு...மேலும் 43 சவரன் நகைகள் மீட்பு.!

ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் நடந்த திருட்டு வழக்கில் மேலும் 43 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் நடந்த திருட்டு வழக்கில் மேலும் 43 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் மகளும், சினிமா திரைப்பட இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  வீட்டில் லாக்கரில் வைத்து இருந்த நகைகள் மற்றும் விலைமதிப்புள்ள நகை கற்கள் திருடு போன சம்பவம் தொடர்பாக கொடுத்த புகாரின் அடிப்படையில், தேனாம்பேட்டை  விசாரணை நடத்தி வந்தனர.

இந்த விசாரணையில் ஐஸ்வர்யா வீட்டில் பல ஆண்டுகளாக வேலை செய்த ஈஸ்வரி என்பவரை போலீசார் கைது செய்தனர். ஈஸ்வரிக்கு உதவியாக இருந்த வெங்கடேசன் என்பவரும் கைது செய்யப்பட்டார். கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர்களிடம் இருந்து ஏற்கனவே சில  சவரன் நகைகள் மீட்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், நேற்று சைதாப்பேட்டை  நீதிமன்றம்  ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் ஆகியரை  2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி இருந்தது.  இதனையடுத்து, அவர்களிடம் தேனாம்பேட்டை போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இதில், தற்போது மேலும் 43 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே , ஏற்கனவே 100 சவரன் தங்கம், 30 கிராம் வைரம், 4 கிலோ வெள்ளி, ரூ.1 கோடி வீட்டிற்கான ஆவணம் ஏற்கனவே மீட்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.