பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு பிரமாண்ட கூட்டணியில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்

Ramya Krishnan who joined the grand coalition after the filmBaahubali

நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிகளில் தற்போது பிசியாகநடித்து வருகிறார்.இவர் நடித்த “பாகுபலி” திரைப்படத்தில் ராஜமாதா கதாபாத்திரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றார்.

சமீபத்தில்  விஜய் சேதுபதி, சமந்தா  நடிப்பில்  வெளியான “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் அவர் விலை மாதுவாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இந்நிலையில் தற்போது ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் விஜய சாந்தி, ஜெகபதி பாபு ஆகியோரும் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்து உள்ளது.