கொரோனாவில் இருந்து மீண்டார் நடிகர் சோனு சூட்...!!

Sonu Sood, who suffered from coronavirus on the 17th, has recovered from corona today.

கடந்த 17 ஆம் தேதி கோரோனோவால் பாதிக்கப்பட்ட சோனு சூட் இன்று கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார்.

கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதிமுறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும், தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன் என்று தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் சோனு சூட் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார். அதாவது, கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமை படுத்துக்கொண்ட சோனு  சூட்டிற்கு இன்று  மேற்கொண்ட கொரோனா  பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது. இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

unknown node