கே ஜி எஃப் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்..??

It has been reported that the release date of the KGF2 film will be changed due to the second wave of Corona.

கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக கே ஜி எஃப் 2 படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில்  கடந்த 2018-ம் ஆண்டு வெளியானகே ஜி எஃப் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.பிரமாண்ட வெற்றியை பெற்ற இந்த திரைப்படம் பிற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெற்றியை கண்டது . தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. ராக்கி என்ற கதாபாத்திரத்தில் யாஷ்  ,அதீரா என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கின்றனர்.

மேலும் ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வரவிருந்த இந்த திரைப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தடை செய்யப்பட்டு ரிலீஸ் தள்ளி போனது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதற்கு பிறகு இந்த திரைப்படம் ஜூலை மாதம் 16 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.