மீண்டும் இணையும் மாரி கூட்டணி மாரி 3....? பாலாஜி மோகன் விளக்கம்..!

It has been reported that actor Dhanush will next be seen in a film directed by Mari director Balaji Mohan

நடிகர் தனுஷ் அடுத்ததாக மாரி பட இயக்குனரான பாலாஜி மோகன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் தனுஷ் நடிப்பில் கர்ணன்,ஜகமே தந்திரம் மற்றும் “அத்ராங்கே” என்ற பாலிவுட் படம் ஆகியவை ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது.தற்போது நடிகர் தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் “D43” படத்தில் நடிக்க உள்ளார்.அதனை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் இரண்டு படங்களும்,,தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தினையும் தனது கைவசம் வைத்துள்ளார் தனுஷ்.

இவ்வாறு பல படங்களில் பிசியாக நடித்து வரும் தனுஷ் அடுத்ததாக மாரி பட இயக்குனருடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . தனுஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்ற மாரி மற்றும் மாரி 2 ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது மாரி 3 என்று சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியானது, ஆனால் மாரி திரைப்படத்தின் 3 பாகம் இல்லை என்றும் புதிய கதை என்றும் இயக்குனர் பாலாஜி மோகன் கூறியுள்ளார்.