பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியான ரியோவின் பாடல்..!

The song "Plan Panni Panna" from the movie Plan Panni Pannanum starring actor Rio Raj has been released in big boss show

நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படத்தின் “பிளான் பண்ணி பண்ணா ” என்ற பாடல் வெளியாகியது.

இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிளான் பண்ணி பண்ணனும் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இந்த படத்தில் இருந்து வெளிவந்த லீரிக் பாடல் மற்றும் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி எது என்றே கூறலாம்.

மேலும் விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திலிருந்து “பிளான் பண்ணி பண்ணா ” என்ற வீடியோ பாடலை நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியிட்டனர். பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த பாடல் ஒளிபரப்பு செய்யும்பொழுது வீட்டிற்குள் அணைத்து பிரபலங்களும் எழுந்து நடனமாடி ரியோவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

unknown node