ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முதல் நிக்கி கல்ராணி வீடு வரை தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்.!

சினிமா பிரலங்கள் தங்கள் அற்புதமான நடிப்பால் ரசிகர்களை அதிக கவனத்தை பெறுகிறார்கள், மேலும் அவர்களுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே கிடைக்கிறது. அதே நேரத்தில்,

சினிமா பிரலங்கள் தங்கள் அற்புதமான நடிப்பால் ரசிகர்களை அதிக கவனத்தை பெறுகிறார்கள், மேலும் அவர்களுக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே கிடைக்கிறது. அதே நேரத்தில், அவர்கள் திரைப்படங்கள் மூலம் பெரும் சம்பாதிக்கிறார்கள், அவர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

ஆனால் சில நேரங்களில், அந்த சினிமா பிரபலங்களின் வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பலத்த பாதுகாப்பு இருந்தபோதிலும், எப்படி திருட்டு சம்பவங்கள் அரங்கேறுகிறது என்பது தான் அதில் ஆச்சரியம். சில முக்கிய தமிழ் சினிமா பிரபலங்கள் வீடுகளில் நடந்த அதிர்ச்சிகரமான திருட்டுகள் குறித்து பார்க்கலாம் வாருங்கள்.

unknown node

rajinikanth aishwarya [Image Source : Google ]

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

சில நாட்களுக்கு முன்பு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகளான ஐஸ்வர்யா வீட்டில் தங்க மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள ஐஸ்வர்யா வீட்டில் லாக்கரில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அவரது வீட்டில் வேலை செய்து வந்த, வேலைக்கார பெண் தான், ஐஸ்வர்யாவின் நகைகளை திருடியது தெரியவந்துள்ளது. பின்னர், பணிப்பெண் மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

unknown node

ஆர்கே

‘எல்லாம் அவன் செயல்’ திரைப்படம் மூலம் பிரபலமான நடிகர் ஆர்கே, படத்தில் வழக்கறிஞராக நடித்தார். அண்மையில், ஆர்.கே. வீட்டில் இல்லாத நேரத்தில், அவரது வீட்டின் பின்புறம் வந்த  மர்ம கும்பல், ஆர்.கே.வின் மனைவியை கட்டிப்போட்டு, 200 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், ஆர்.கே அளித்த  புகாரைத் தொடர்ந்து, போலீசார் 16 நாட்கள் தொடர் விசாரணைக்குப் பிறகு, தனிப்படை போலீஸ் அதிகாரிகள் குழு அமைத்து, நேபாளத்தில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை கைது செய்தனர்.

unknown node

பார்வதி நாயர்

அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை பார்வதி நாயர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், நடிகையின் வீட்டில் ஒரு அதிர்ச்சியூட்டும் திருட்டு நடந்தது. மேலும், அவர் தனது வீட்டில் இரண்டு ஆண்டுகளாக வேலை செய்யும் நபர் தனது வீட்டில் உள்ள விலை மதிப்புமிக்க பொருட்களை திருடிவிட்டதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, ரூ.6 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரம், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் ஆகியவை திருடப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

unknown node

Nikki Galrani Aadhi [Image Source: Google ]

நிக்கி கல்ராணி

பிரபல நடிகை நிக்கி கல்ராணி சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். தனியார் ஏஜென்சி மூலம் தனுஷ் என்ற இளைஞரை தனது வீட்டில் வேலைக்கு அமர்த்தினார். ஆனால், தனுஷ் அவரது வீட்டில் இருந்த சில பொருட்களை திருடியுள்ளார். அப்போது விலையுயர்ந்த கேமரா மற்றும் 40 ஆயிரம் ரூபாய்  காணாமல் போனதை கவனித்த நிக்கி கல்ராணி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், சிசிடிவி ஆதாரங்களைத் தொடர்ந்து தனுஷை கைது செய்த காவல்துறை அதிகாரிகள் நடிகையின் காணாமல் போன பொருட்களை மீட்டனர்.