அனுமதியின்றி கிளிகள் வளர்த்த ரோபோ சங்கர்...அதிரடியாக பறிமுதல் செய்த வனத்துறையினர்.!

சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி வளர்த்து வந்த கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி வளர்த்து வந்த கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் தன்னுடைய வீட்டில் 2 கிளிகள் வளர்ந்து வந்துள்ளார். ஆனால், அந்த கிளிகளை வளர்ப்பதற்கான அனுமதியை அவர் பெறவில்லை என்ற காரணத்தால் கிண்டி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து அந்த இரண்டு கிளிகளையும் பறிமுதல் செய்தனர்.

unknown node

Robo Shankar [Image Source : Google ]

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட அந்த இரண்டு கிளிகளையும் கிண்டியில் உள்ள நேசனல் சிறுவர் பூங்காவில் கிண்டி வனத்துறையினர்  ஒப்படைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகினறனர்.

unknown node

Parrots [Image Source : Google ]

பலருக்கும் வீட்டில் கிளிகளை வளர்க்க பிடிக்கும் ஆனால் எல்லா மாவட்டத்திலும் அதனை வளர்க்க அனுமதி கிடையாது. அப்படியே வளர்க்கவேண்டும் என்றால் அதற்கான சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி அவர்கள் அனுமதி கொடுத்த பிறகே வளர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.