ராக்கி பாய் கமிங்... கேஜிஎப் -2 ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கேஜிஎஃப்-2 படத்தின் டிரைலர் வரும் மார்ச் 27-ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேஜிஎஃப்-2 படத்தின் டிரைலர் வரும் மார்ச் 27-ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வெளியாகவுள்ள திரைப்படங்களில் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று கேஜிஎஃப்-2. இந்த படத்தை இயக்குனர் பிரசாத் நீல் இயக்கியுள்ளார். ராக்கி என்ற கதாபாத்திரத்தில் யாஷ் அதீரா என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அவர்களும் நடிக்கின்றனர்.மேலும் ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் போன்ற பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி உலகம் முழுவது தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து தற்போது கேஜிஎஃப்-2 படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கேஜிஎஃப்-2 படத்தின் டிரைலர் வரும் மார்ச் 27-ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு படத்திலிருந்து வெளியான டீசர் யூடியூபில் 240 மில்லியன் மேல் பார்வையாளர்களை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node
ராக்கி பாய் கமிங்... கேஜிஎப் -2 ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!