இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான த்ரில்லர் திரைப்படம் ‘ரன் பேபி ரன்’. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
முதல் முறையாக நடிகர் ஆர்.ஜே.பாலாஜி த்ரில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதற்காகவே இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது. இந்நிலையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையங்குகளில் வெளியான இந்த படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவான கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
unknown nodeunknown nodeமற்றோருவர் “ரன்பேபிரன் மருத்துவ சீட் மோசடியை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். கொலைக்குப் பின்னால் நிறைய திருப்பக் காட்சிகளுடன் மிக நல்ல உள்ளடக்கமாக இருந்தது. ஆர்.ஜே. பாலாஜி அண்ணா நடிப்பு & சண்டைக் காட்சிகள் இயற்கையாகவே தெரிகிறது. படத்தின் இசை அருமையாக இருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.
unknown nodeunknown nodeunknown node