நடிகை சாய் பல்லவி கடைசியாக கடந்த 2022-ஆம் “கார்கி” திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக சிவகார்த்திகேயனின் 21-வது படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
unknown nodeSaiPallavi [Image Source: Twitter ]
ஆனால், இன்னும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இந்த நிலையில், சாய் பல்லவி அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக கிட்டத்தட்ட 2 வருடங்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். அது என்ன திரைப்படம் என்றால் அல்லு அரவிந்த் தயாரிப்பில் உருவாகவிருக்கும் ராமாயணம் படத்தில் தானம்.
unknown nodeSai Pallavi [Image Source: Twitter ]
இந்த திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி சீதையாக நடிக்கிறாராம். எனவே இந்த படத்தில் தான் அடுத்த இரண்டு வருடங்களாக நடிக்க போகிறாராம். எனவே இந்த தகவலை பார்த்த சாய் பல்லவி ரசிகர்கள் 2 வருடம் அப்போ..? உங்களுடைய ஒரு படத்தை கூட பார்க்க முடியாதா.? என சோகத்துடன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
unknown nodeSai Pallavi [Image Source : Google]
மேலும். விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் சாய் பல்லவி தான் முதலில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. அதைபோல் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்திலும் சாய் பல்லவி தான் முதலில் நடிக்கவிருந்தாராம். இரண்டு படங்களில் பெரிதாக கதாபாத்திரங்கள் பேசப்படும் அளவில் இருக்காது என்பதால் அவர் நடிக்க மறுத்துவிட்டதாக நேற்று தகவல் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.