விண்ணைத்தாண்டி வருவாயாவுக்கு பிறகு நான் சந்தித்த அனுபவம்.! சமந்தா பகிர்ந்த ருசிகர தகவல்.!

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்திற்கு பிறகு ஏ அரேஞ்மென்ட் ஆஃப் லவ் எனும் ஆங்கில படத்திற்க்கு தான் ஆடிஷனில் கலந்துகொண்டுள்ளேன் என சமந்தா ஒரு தகவலை

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்திற்கு பிறகு ஏ அரேஞ்மென்ட் ஆஃப் லவ் எனும் ஆங்கில படத்திற்க்கு தான் ஆடிஷனில் கலந்துகொண்டுள்ளேன் என சமந்தா ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு- திரிஷா நடித்து நல்ல வெற்றியை பதிவு செய்த திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த திரைப்படம் தமிழை போல தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாரானது. அந்த படத்தில் நாக சைதன்யா, சமந்தா நடித்துப்பார்கள். மேலும், சமந்தா, தமிழில் ஒரு சிறு வேடத்திலும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்து இருப்பார்.

unknown node

அந்த படத்தில் நடிப்பதற்காக சமந்தாவுக்கு ஆடிசன் வைக்கப்பட்டதாம். அதில் கலந்துகொண்ட சமந்தா ஆடிஷனில் தேர்வு செய்யப்பட்டு விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கில் நடித்தார்.

அதன் பிறகு, தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு, முன்னணி நடிகையாக வலம் வரத்தொடங்கினார்.

unknown node

தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என நடித்துக்கொண்டிருந்த சமந்தா தற்போது ஒரு சர்வதேச திரைப்படத்திலும் நடிக்கிறாராம். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக சமந்தா ஆடிஷனில் கலந்துகொண்டாராம். விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு தான் கலந்துகொண்ட ஆடிசன் என கூறியுள்ளார் சமந்தா.

ஏ அரேஞ்மென்ட் ஆஃப் லவ் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஹாலிவுட் இயக்குனர் பிலிப் ஜான் என்பவர் இயக்க உள்ளாராம். சமந்தா நடிக்க உள்ள தகவலை படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.விரைவில் படத்தை பற்றிய அடுத்தகட்ட அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.