பரபரப்பான சூழலில் மரணமடைந்த "சம்சாரம் அது மின்சாரம்" பட இயக்குனர்!

நடிகர் விசு தயாரிப்பாளர், இயக்குனர், கதையாசிரியர் மற்றும் வசனகர்த்தா என தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வந்தார். இவர் திரைப்படங்களில்

நடிகர் விசு தயாரிப்பாளர், இயக்குனர், கதையாசிரியர் மற்றும் வசனகர்த்தா என தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வந்தார். இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாது, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படமாகும்.

இந்நிலையில், கடந்த சில காலங்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், இவர் இன்று மாலை 5:30 மணியளவில் காலமானார். இவரது மரணம் திரையுலக பிரபலங்கள் மத்தியில் மிக பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.