அப்பா மகன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சந்தானம்..!

It has been reported that actor Santhanam will next play the role of father and son in director Srinivasa Rao's direction.

நடிகர் சந்தானம் நடிப்பில் அடுத்ததாக இயக்குனர் இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் அப்பா மகன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்.

காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பிஸ்கோத் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் சுமாரான வரவேற்ப்பை பெற்றது. அதனை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் அடுத்ததாக பாரிஸ் ஜெயராஜ் மற்றும் டிக்கிலோனா ஆகிய இரண்டு படங்கள் வெளியாகவுள்ளது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சந்தானம் அடுத்தாக ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஆம், அந்த படத்தை இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கவுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் முதன் முதலாக நடிகர் சந்தானம் அப்பா மகன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த திரைப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது, மேலும் இந்த திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக யார் நடிக்கப்போகிறார் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்பா மகன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சந்தானம்..!