ரிலீஸ் தேதியை குறித்த சந்தானத்தின் 'பாரிஸ் ஜெயராஜ்'.!

It has been announced that Paris Jayaraj's film starring Santhanam will be released in theaters on February 12.

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள பாரிஸ் ஜெயராஜ் படத்தினை வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் பிஸ்கோத் . இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அதனை தொடர்ந்து டிக்கிலோனா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் இவர் ஜான்சன் கே இயக்கத்தில் உருவாகியுள்ள பாரிஸ் ஜெயராஜ் படத்திலும் நடித்து முடித்துள்ளார் .இவர் சந்தானம் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற “A1” படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“பாரிஸ் ஜெயராஜ்” படத்தில் கதாநாயகியாக அனைகா சோடி மற்றும் சாஷ்டி ராஜேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க மொட்டை ராஜேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் .சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் படப்பிடிப்பினை முடித்த பாரிஸ் ஜெயராஜ் படத்தினை குறித்த அறிவிப்பு ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.அதாவது சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள பாரிஸ் ஜெயராஜ் படத்தினை வரும் பிப்ரவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இது சந்தானம் ரசிகர்களைடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

unknown node