ட்விட்டரில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த #SarkarPuratchiArambam ஹாஷ்டக்..!

ட்விட்டரில் இந்திய அளவில் முதல் இடம் பிடித்துள்ளது சர்கார் புரட்சி ஆரம்பம் ( # SarkarPuratchiArambam ) என்ற ஹாஷ்டக்.

ட்விட்டரில் இந்திய அளவில் முதல் இடம் பிடித்துள்ளது சர்கார் புரட்சி ஆரம்பம் ( #SarkarPuratchiArambam) என்ற ஹாஷ்டக்.

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 3வதாக உருவான திரைப்படம் சர்கார். இப்படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது.படத்திற்கு எதிர்பார்த்தது போலவே முதல் நாள் நல்ல வசூல் செய்தது.

unknown node

ஆனால் படத்தில் அரசை விமர்சித்து பல காட்சிகள், வசனங்கள் இடம் பெற்றது. அதிலும் குறிப்பாக அதிமுக ஆட்சியில் கொடுத்த இலவச மிக்ஸியை இயக்குனர் முருகதாஸ் தீயில் எரிவது போல காட்சி இடம்பெறும் இது அதிமுககாரர்களை மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. ஆதலால் அவர்கள் சர்கார் ஓடும் திரையரங்கில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

unknown node

இதன் பின் சர்கார் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை மறுதணிக்கையில் தணிக்கைக்குழு நீக்கியது.சர்கார் படத்தில் இடம்பெற்றிருந்த அதிமுக அரசை விமர்சித்த காட்சிகளை நீக்கியது.

சமூக வலை தளமான ட்விட்டரில் தளபதி விஜய்யின் ரசிகர்கள் சர்கார் புரட்சி ஆரம்பம் ( #SarkarPuratchiArambam) என்ற ஹாஷ்டக்கை ட்ரென்டிங் செய்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த ஹாஷ்டக் இந்திய அளவில் முதல் இடம் பிடித்துள்ளது.