செம குத்தாட்டம் போடும் சயீஷா.! "பத்து தல" படத்தின் 'ராவடி' பாடல் வெளியீடு.!

நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள 'பத்து தல' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம்

நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்து தல’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

unknown node

PathuThalaTrailer [Image Source : Twitter]

படத்தில் ப்ரியா பவானி சங்கர், டிஜே, கெளதம் கார்த்தி, உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஏற்கனவே படத்தில் இருந்து வெளியான பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.

unknown node

str pathu thala[Image Source : Google ]

இந்த திரைப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தில் இடம்பெற்ற ‘ராவடி’  எனும் வீடியோ  பாடல் இன்று வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

unknown node

அதன்படி தற்போது அந்த ‘ராவடி’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. பாடலில் ஆர்யாவின் மனைவியும் நடிகையுமான சயீஷா செம குத்தாட்டம் ஆடியுள்ளார். அதைபோல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் அருமையாக இருப்பதால் இந்த பாடலும் பெரிய ஹிட் ஆகும் என கூறப்படுகிறது. மேலும் பத்து தல திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node