"என்.ஜி.கே" திரைப்படத்திற்கு பிறகு பிரபல நடிகருடன் இணைந்த செல்வராகவன்

This news gives information about Selvaraghavan who is associated with the famous actor after "NGK"-"NGK" thiraipadathirkku piraku

தற்போது ஜெயம் ரவியுடன் இணைந்து பணியாற்ற பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக சினிமா வட்டாரத்தில் வதந்திகள் பரவி வருகிறது.

இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் மிக பெரிய இயக்குனர்.இவர் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து உள்ளார்.

இவரது தம்பியான பிரபல நடிகர் தனுஷியை வைத்து “துள்ளுவதோ இளமை ” , “மயக்கம் என்ன ” ,”காதல் கொண்டேன் ” ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இவரது படங்கள் அனைத்தும் மிக வித்தியாசமான முறையில் இருக்கும்.இந்நிலையில் இவர் இயக்கத்தில் மே 31-ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் “என்.ஜி.கே”. இப்படத்தில் நடிகராக சூர்யாவும் ,அவர்க்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்து உள்ளார்.

“என்.ஜி.கே” திரைப்படம் அரசியல் நிறைந்த கதைக்களமாக உருவாக்கப்பட்டுள்ளது. என படத்தின் டீஸர் பார்க்கும் போது தெரிகிறது.தற்போது இப்படம் மீது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் செல்வராகவன் அடுத்து எந்த நடிகருடன் இணைவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வந்த நிலையில்.தற்போது ஜெயம் ரவியுடன் இணைந்து பணியாற்ற பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக சினிமா வட்டாரத்தில் வதந்திகள் பரவி வருகிறது.