செம மாஸ்! வெறித்தனமான லுக்கில் நடிகர் சூர்யா...வெளியான 'கங்குவா' பர்ஸ்ட் லுக்.!

நடிகர் சூர்யா இன்று தனது 48-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து

KanguvaFirstLook

நடிகர் சூர்யா இன்று தனது 48-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த இலையில், அவர் தற்போது நடித்து வரும் கங்குவா படத்தின் அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டுவருகிறது.

அந்த வகையில், இன்று 12 மணிக்கு கங்குவா படத்தின் முன்னோட்ட காட்சி ஒன்று வெளியாகி இருந்தது. இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை மற்றும் சூர்யாவின் வசனம் காண்போரை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில், அதனை தொடர்ந்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என முன்னதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது.

அதனை தொடர்ந்து தற்போது பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் நடிகர் சூர்யா மிகவும் கெத்தான லுக்குடன் கையில் மிகப்பெரிய கத்தியுடன் குதிரையில் இருக்கிறார். பர்ஸ்ட் லூக்கை பார்த்தவுடனே படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

unknown node