அதிர்ச்சி : பிரபல நடிகை கொரோனா தொற்றால் மரணம்..!

இந்தி நடிகை மாதவி கோங்கடே கொரோனா தொற்றால் காலமானார்.

இந்தி நடிகை மாதவி கோங்கடே கொரோனா தொற்றால் காலமானார்.

இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் இந்தி நடிகை மாதவி கோங்கடே. இவர் ஏராளமான டிவி தொடர்களில் நடித்த நிலையில், ‘அனுபமா’ சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு சின்னத்திரை மற்றும் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.