அதிர்ச்சி…பிரபல மலையாள நடிகர் மமுக்கோயா காலமானார்..சோகத்தில் திரையுலகம்..!!

Default Image
பிரபல மலையாள நடிகரான மமுக்கோயா இன்று காலமானார். கடந்த திங்கட்கிழமையன்று திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர் கோழிக்கோட்டில் உள்ள மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது இன்று மதியம் ஒரு மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 76. இவருடைய திடீர் மறைவு திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்துள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். 

தமிழில் அரங்கேற்ற வேளை, கோப்ரா உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். 1979ல் அன்யருடே பூமி  என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.  அதன் பிறகு காந்திநகர் செகண்ட் ஸ்ட்ரீட், நாடோடிக்காற்று, பெருமழக்காலம், வடக்கு நோக்கி எந்திரம், பட்டனப்பிரவேசம், மழவில்காவடி உள்பட 450க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்