அடுத்தடுத்து அரசியல் படங்களில் களமிறங்கும் சிம்பு! சீமான் – அனிருத் கூட்டணியில்?!!

நடிகர் சிம்பு நடிப்பில் அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வெளிவர உள்ளது. பொங்கலுக்கு ரிலீஸ் என கூறப்பட்ட நிலையில் சில

நடிகர் சிம்பு நடிப்பில் அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வெளிவர உள்ளது. பொங்கலுக்கு ரிலீஸ் என கூறப்பட்ட நிலையில் சில காரணங்களால்ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஹிபிஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தி எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஷூட்டிங் சிம்பு பிறந்தநாளான பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு படத்தை சிம்புவை வைத்து இயக்க உள்ளாராம். இந்த படமும் தீவிர அரசியல் படமாக உருவாக உள்ளதாம். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

DINASUVADU

அடுத்தடுத்து அரசியல் படங்களில் களமிறங்கும் சிம்பு! சீமான் – அனிருத் கூட்டணியில்?!!