நடிகை சிம்ரன் மகன்களை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் புகைப்படம்!

ரசிகர்கள் அன்புடன் இடுப்பழகி என்று அழைக்கப்படும் நடிகை தான் சிம்ரன். 90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர். இவர் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டு இருந்த சமயத்திலே கடந்த 2003-ஆம் ஆண்டு தீபக் பாக்கா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.
எப்போதும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய புகைப்படங்களை மட்டும் வெளியீட்டு வந்த நடிகை சிம்ரன் தற்போது தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்த குட்டி பெண் யார் தெரியுமா?
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று அவர் தனது குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தார். அப்போது தனது மகன்கள் மற்றும் கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தான் தற்போது வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இது சிம்ரனின் மகன்களா? என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மேலும் நடிகை சிம்ரன் தற்போது படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், அவர் தற்போது சபதம் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தவிர இவருடைய நடிப்பில் அந்தகன், துருவ நட்சத்திரம் படம் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025