மறைந்த பாடகி பவதாரிணி கடைசியாக பாடிய பாடல்! உருக்கமாக இரங்கல் தெரிவித்த சிம்பு!

இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரிணி நேற்று ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய

SilambarasanTR bhavatharini

இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரிணி நேற்று ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், மறைந்த பாடகி பவதாரிணி கடைசியாக சிம்பு நடிப்பில் யுவன் இசையில் வெளியான மாநாடு படத்தில் இடம்பெற்று இருந்த “மெஹெரெசிலா” பாடலை பாடி இருந்தார். இவர் பாடிய இந்த பாடலில் அவருடைய குரல் சிறிது நிமிடங்கள் மட்டுமே வரும். ஆனால், இந்த பாடல் ரசிகர்கள் மனதில் இடம்பெற்றது என்றே கூறலாம்.

மனம் பதைக்கிறது! பாடகி பவதாரிணி மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல்!

இதனையடுத்து, பவதாரிணி மறைவுக்கு நடிகர் சிம்பு தனது இரங்கலை தற்போது தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் “மெஹெரெசிலா” பாடலை வெளியீட்டு  தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது ” அப்பாவித்தனத்திற்காகவும் அன்பிற்காகவும் மக்கள் இதயத்தில் என்றும் வாழும் குரல் நீங்கள் ஒரு தூய ஆன்மாவாக இருந்தீர்கள் சீக்கிரம் சென்றுவிட்டார்.

unknown node

இளையராஜா சார் மற்றும் எனது சகோதரரின் யுவன் குடும்பத்தினருக்கு வலிமை அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் இக்கணத்தில் நிம்மதியாக இருங்கள் பவதாரிணி” என உருக்கமாக தனது இரங்கலை சிம்பு தெரிவித்துள்ளார்.  கடந்த சில ஆண்டுகளாக இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று (ஜனவரி 25)-ஆம் தேதி இலங்கையில் காலமானார். இன்று அவருடைய உடல் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவுள்ளது.