முக்கியச் செய்திகள்

மனசு தங்கம் சார்…தனக்கு வந்த பெரிய படத்தை விட்டு கொடுத்த விஜயகாந்த்…உண்மையை உடைத்த சரத்குமார்.!!

Published by
பால முருகன்

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு இணையாக ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருந்தவர் என்றால் கேப்டன் விஜயகாந்த் தான். இவருடைய நல்ல மனத்திற்காகவே இவரை பலருக்கும் பிடிக்கும் என்று கூட கூறலாம்.

Vijaykanth [Image Source : Twitter/@HussainVJFan]

இந்நிலையில், விஜயகாந்த் பற்றி பல பிரபலங்கள் பெருமையாக பேசுவது உண்டு. அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சரத்குமார் விஜயகாந்த் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” விஜயகாந்த் மனசு ரொம்ப பெருசு..ஒரு நம்பர் 1 பெரிய இயக்குனர் விஜயகாந்த் சாரிடம் கதை கூறியுள்ளார். அந்த கதையை விஜய்காந்த் முழுவதும் கேட்டுவிட்டு நன்றாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

sarathkumar [Image source : file image]

பிறகு இந்த கதை அருமையாக இருக்கிறது. ஆனால், இந்த கதையில் என்னை விட சரத்குமார் நடித்தால் நன்றாக இருக்கும். நீங்கள் உடனே இந்த கதையை அவரிடம் கூறுங்கள் என்று கூறியுள்ளார். உடனடியாக, விஜயகாந்தே எனக்கு கால் செய்து சரத் ஒரு கதை கேட்டேன். அந்த கதை உங்களுக்கு நன்றாக இருக்கும்.

sarathkumar and vijayakanth [Image source : file image]

எனவே, நீங்கள் அந்த கதையை கேட்டுவிட்டு படத்தில் நடிங்கள்” என கூறினார். இந்த மாதிரி மனசு யாருக்குமே வராது. அப்படி இது போன்ற ஒரு மனசு வருகிறது என்றால் விஜயகாந்திற்கு மட்டும் தான்” என விஜயகாந்த் பற்றி சரத்குமார் பேசியுள்ளார். மேலும் பேசிய சரத்குமார், பிரபாகரன் படத்தில் நடித்து கொண்டிருந்த சமயத்தில் எனக்கு கழுத்து பகுதியில் அடிபட்டது.

sarathkumar and vijayakanth [Image source : file image]

இதனால் சில நாட்கள் நான் ஓய்வில் இருந்தேன். எனக்காக காத்திருந்து அந்த படத்தை எடுத்தார்கள். சிலர் விஜயகாந்த் சாரிடம் கூறியுள்ளார்கள் 5 நாட்கள் தான் சரத்குமார் நடித்திருக்கார். அதனால் வேறு நடிகரை நடிக்க வைத்து படம் எடுப்போம் என்று. ஆனால், விஜய்காந்த் வேண்டாம் அதில் சரத்குமார் தான் நடிக்கவேண்டும் என காத்திருந்து படத்தை எடுக்க வைத்தார். கேப்டன் பிரபாகரன் படம் பண்ண விஜயகாந்த் சார் தான் காரணம்” என கூறியுள்ளார். சரத்குமார் பேசியதை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கேப்டன் மனசு தங்கம் யா” என கூறி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

ஏர் இந்தியா நிறுவனத்தில் 51 பாதுகாப்பு குறைபாடுகள் – DGCA தணிக்கையில் அம்பலம்.!

டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…

7 hours ago

மோடி எங்கே? அமித்ஷா பதிலுரை.., எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…

8 hours ago

கே.டி.ராகவனுக்கு மீண்டும் பொறுப்பு – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…

8 hours ago

பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!

சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…

9 hours ago

ஆக.1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25% வரி – அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…

9 hours ago

நாசா – இஸ்ரோ கூட்டு முயற்சி.., விண்ணில் சீறி பாய்ந்தது ‘நிசார்’ செயற்கைக்கோள்.!

ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…

10 hours ago