சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘வேலைக்காரன்’ படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது சிவா பொன்ராம் இயக்கத்தில் சமந்தாவுடன் இணைந்து ஓர் படத்தில் நடித்து வருகிறார். 70 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் சிவாவின் அடுத்த படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் என தகவல் வெளியானது. சமீபத்தில் பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அவர் “வருடத்தில் இரண்டு படங்களை கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். இதையும் தவிர்த்து. 2018 ல் இன்னொரு சர்ப்பிரைஸ் இருக்கிறது. விரைவில் சொல்வேன்” என கூறியுள்ளார்.
source:www.dinasuvadu.com