இன்று நடிகர் சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதிக்கு, இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியை தொடங்கி தனது திறமையாலும் விடாமுயற்சியாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது உயர்ந்துள்ளார். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு தனது உறவினர் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்ற 7 வயது மகள் உள்ளார்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதிக்கு, இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. ரசிகர்கள் சமூக வலைத்தளம் மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் கூறிருப்பது ” 18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி அம்மாவும் குழந்தையும் நலம்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
unknown node