படங்கள் திரையரங்குகளில் வெளியாக தான் எனக்கு ஆசை.!- சிவகார்த்திகேயன்.!

படங்கள் திரையரங்குகளில் வெளியாக தான் எனக்கு ஆசை என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

படங்கள் திரையரங்குகளில் வெளியாக தான் எனக்கு ஆசை என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிபடங்கள் திரையரங்குகளில் வெளியாக தான் எனக்கு ஆசைமாவில் முன்னை நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் டாக்டர், அயலான் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. இதில் டாக்டர் படம் வரும் அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி வெளியாகிறது.

unknown node

இந்நிலையில், கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். திரையரங்குகளில் நான் படம் பார்த்து வளர்ந்தவன் எப்போதும் படங்கள் திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என்பதுதான் எனது ஆசை.

unknown node

நான் நடித்த டாக்டர் திரைப்படம் வரும் அக்டோபர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த காலச் சூழலில் எனது தனிப்பட்ட சிந்தனையை மட்டும் இதில் திணிக்க முடியாது. ஓடிடி தளங்களை பொறுத்தவரை அவற்றில் உள்ள நல்ல விஷயங்களை மட்டுமே நான் பார்க்கிறேன்.

unknown node

நடிகர்கள் சேர்ந்து இவ்விவகாரத்தில் யாருக்கு எதிராகவும், சாதகமாகவும் முடிவு எடுக்க முடியாது. படங்கள் ஏதோ ஒரு வகையில் வெளியாக வேண்டும். திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்குகளுக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது திரையரங்குகளில் பொதுமக்கள் திரைப்படத்தை காண்பற்கான வசதிகள் மேம்பட்டுள்ளன ” என தெரிவித்துள்ளார்.