எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! அந்தர் பல்டி அடித்த சிவகார்த்திகேயன்!

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அயலான். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இஷா கோப்பிகர், ஷரத் கேல்கர், பானுப்ரியா, பால சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தினை PhantomFX Studios நிறுவனம் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான இசைவெளியீட்டு விழா பிரமாண்டமாக நேற்று சென்னையில் நடைபெற்றது.
லிப் லாக் காட்சியா? கமல் படத்தால் கதறி அழுத மீனா!
அந்த விழாவில் சிவகார்த்திகேயன், படத்தின் இயக்குனர் ரவிக்குமார், கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ஜெயம் ராஜேஷ் , உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள். அப்போது விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஜெயம் ராஜேஷ் ” விழாவில் பேசும்போது கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் ஜெயம் ராஜேஷ் ” தெலுங்கு சினிமாவில் பாகுபலி , கன்னட சினிமாவில் கேஜிஎஃப் போன்று தமிழ் சினிமாவில் அயலான் படம் கண்டிப்பாக இருக்கும்” என பேசியிருந்தார்.
இவர் இப்படி பேசியவுடன் கீழே கேட்டுக்கொண்டு இருந்த சிவகார்த்திகேயன் சற்று அதிர்ச்சியாகி சிரித்துக்கொண்டே பார்த்தார். பிறகு மேடையில் பேசுவதற்காக வந்த சிவகார்த்திகேயன் ” தயாரிப்பாளர் பேசியதற்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. படம் அவருடைய படம் என்பதால் அதன் மீது இருக்கும் நம்பிக்கையை வைத்து அப்படி பேசி இருக்கிறார். படம் பொங்கலுக்கு வருகிறது பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் சொல்லுங்கள்” எனவும் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025