தீபாவளிக்கு பட்டாசு போல் வெடிக்க வரும் சிவகார்த்திகேயனின் அயலான்.!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'மாவீரன்' என்ற ஆக்‌ஷன் ஃபேண்டஸியில் நடித்து வருகிறார். இந்த வருடத்தில் இவருக்கு இரண்டு படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கிறது. அட

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ என்ற ஆக்‌ஷன் ஃபேண்டஸியில் நடித்து வருகிறார். இந்த வருடத்தில் இவருக்கு இரண்டு படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கிறது. அட ஆமாங்க… நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த அயலான் இந்த வருடம் ரிலீசுக்கு தயாராகுகிறது போல் தெரிகிறது.

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா ரசிகர்கள் அடுத்ததாக பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் என்றால் ‘அயலான்’ திரைப்படம் என்று கூறலாம். கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சிறிது நேரத்திற்கு முன் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் நிலையில் உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பார்வையாளர்களை மகிழ்விக்க அயலான் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஏலியன் உலகத்தில் வந்தால் எப்படி இருக்கும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம், சிவகார்த்தியனுக்கு அடுத்தகட்ட இடத்திற்கு கொண்டு செல்லுமா இல்லையா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.