,
shankar about sjs

கேம்சேஞ்சர் படத்தில் எஸ்.ஜே.சூர்யா தான் மெயின்..அப்போ ராம்சரண்? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஷங்கர்!!

By

கேம்சேஞ்சர் : பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ஒரே சமயத்தில் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தையும்,  ராம்சரணை வைத்து கேம்சேஞ்சர் படத்தையும் இயக்கி வந்த நிலையில், இந்தியன் 2படம் முழுவதுமாக முடிந்து வருகின்ற ஜூலை 12-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக ஷங்கர் கேம்சேஞ்சர் படத்தின் வேளைகளில் மும்மரமாக இருக்கிறார்.

ஒரு பக்கம் இந்தியன் 2 ப்ரோமோஷன் வேளைகளிலும் மும்மரமாக இருக்கிறார். கேம்சேஞ்சர் படத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்துள்ளார். படத்தில் கியாரா அத்வானி, ஜெய்ராம், நவீன் சந்திரா, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் ராம்சரண் நடிக்கும் கதாபாத்திரம் தான் முக்கியமான கதாபாத்திரம் அவர் தான் ஹீரோ என படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்து இருக்கும் சூழலில், இயக்குனர் ஷங்கர் படத்தில் எஸ்.ஜே.சூர்யா தான் மெயின் ரோல் என்று கூறியுள்ளார். ஷங்கர் பேசியதை பார்த்த ராம் சரண் ரசிகர்கள் என்னங்க சொல்றீங்க என்பது போல அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.

இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்தில் சென்னையில் நடந்த செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய ஷங்கர் ” எஸ்.ஜே.சூர்யா இந்தியன் 2-வில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இந்தியன் 2-வில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கேம்சேஞ்சர் படத்தில் அவர் தான் மெயின் ரோலில் நடித்துள்ளார் ” எனவும் ஷங்கர் கூறியுள்ளார். இதனை பார்த்த பலரும் அப்போ ராம் சரண் ஹீரோ இல்லையா என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Dinasuvadu Media @2023