காளை பயிற்சிக்கு மட்டும் இத்தனை கோடியா..? 'வாடிவாசல்' படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்.!!

வாடிவாசல் படம் பற்றி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

வாடிவாசல் படம் பற்றி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

வாடிவாசல்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா  நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் வாடிவாசல். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.  படத்தின் டெஸ்ட் ஷூட் கடந்த ஆண்டு நடைபெற்றது. அதற்கான சின்ன வீடியோ ஒன்றும் வெளியானது.

unknown node

இந்த படத்திற்காக சூர்யா தன்னுடைய வீட்டில் இரண்டு காளை மாடுகளுடன் பழகி பயிற்சி எடுத்து வருகிறார். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து முடித்த பிறகு வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாடிவாசல் லேட்டஸ்ட் அப்டேட்

வாடிவாசல் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் பற்றி படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ‘வாடிவாசல்’ படத்தில் காளை வரும் சீன்கள் மிக முக்கியமானவை. இதனால், அதற்கான CG வேலைகள் தற்போது லண்டனில் வேகமாக நடைபெற்று வருகிறது. படத்தில் காளை சீன்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளதால், படக்குழு தீவிரமாக உழைத்து வருகிறது.

unknown node

மேலும் பேசிய அவர் உலக தமிழருக்கு ஒரு விடியல் வாடிவாசல். இந்த படம் உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு சிறப்பான இடத்தை பிடிக்கும். இது உலக தமிழர்கள் எல்லாம் உச்சம் பெறக்கூடிய படமாக இருக்கும்” என புகழ்ந்து பேசியுள்ளார்.