ஓடிடியில் வெளியாகும் மெகா ஹிட் 'வாரிசு'.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகி வசூலில் சக்க போடு போட்ட வாரிசு திரைப்படம் இன்னும் சில

இயக்குனர் வம்சி இயக்கத்தில் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வெளியாகி வசூலில் சக்க போடு போட்ட வாரிசு திரைப்படம் இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 310 கோடிகள் வசூலை கடந்து விஜயின் சினிமா கேரியரில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

unknown node

ThalapathyVIJAY BB Varisu [Image Source: Twitter ]இந்நிலையில். வாரிசு திரைப்படத்தை திரையரங்குகளில் பார்க்காத ரசிகர்கள் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ஆவலுடன் காத்திருந்தார்கள். அவர்களின் காத்திருப்பை பூர்த்தி செய்யும் வகையில், தற்போது வாரிசு திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதியை படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் அறிவித்துள்ளது.

unknown node

அதன்படி, படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர்.

unknown node

leo [Image Source : Twitter]

மேலும் வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு முழு வீச்சில் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.